புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகளை ஏராளமான மாடுபிடி வீர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளருக்கும் ஏற்பாட்டாளர்கள் பரிசுகளை வழங்கினர்.
13 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்த தஞ்சை ராயமுண்டான்பட்டியை சேர்ந்த சுகேனுக்கு பல்சர் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
கைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது.
போட்டியின்போது காயமடைந்த 40க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கும், பலத்த காயம் அடைந்த ஒன்பது பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.